மாவட்ட மைய நூலகத்தில்கோடை கால பயிற்சி முகாம்

தேனி மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.;

Update: 2023-05-16 18:45 GMT

தேனி மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது. பயிற்சி முகாமை நூலக வாசகர் வட்ட தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி தலைமை தாங்கி பேசினார். முதல்நிலை நூலகர் முத்துக்குமரன் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் நீலபாண்டியன், இணைச்செயலாளர்கள் மணி, நாகராஜன், பட்டிமன்ற நடுவர் கவிக்கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் பயிற்சி அளித்தார். இதில் நூலக வாசகர் வட்ட பொருளாளர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்