தருவைகுளத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு

தருவைகுளத்தில் கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2022-11-23 18:45 GMT

தருவைகுளம்:

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் தோமஸ் (வயது 56). இவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று முன்தினம் காலையில் திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளத்துக்கு வந்தடைந்தார். அங்கு மீன்களை இறக்கி கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கடலில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் தோமசை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தருவைகுளம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்