என்ஜினீயர் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜோலார்பேட்டை அருகே நடந்த என்ஜினீயர் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-09-08 17:29 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பார்சம்பேட்டை கடைத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). என்ஜினீயரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த விளையாட்டை கோபாலகிருஷ்ணன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு போதையில் இருந்த வாலிபர்கள் கோபாலகிருஷ்ணனை கேலி செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த 5 பேர் கோபாலகிருஷ்ணனை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப் பதிவு செய்து வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த சிந்து என்ற பிரவின் குமார் (வயது 21), மவுரிஸ் (21), நித்திஷ் (22), திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த நவீன் குமார் (21), சக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த டேவிட் என்ற எழிலரசன் (21) ஆகிய 5 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்