மாற்றுத்திறனாளியை கத்தியால் குத்திய வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Update: 2023-06-01 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மகன் சக்திவேல் (வயது24). இவர் கடந்த 2018-ம் ஆண்டு புஷ்பவனத்தில் நடந்த பிரச்சினையில் மாற்றுத்திறனாளியான மாரியப்பன் என்பவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இதுகுறித்து அவரது மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர். இதற்கிடையே கேரளாவுக்கு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சக்திவேல் சொந்த ஊருக்கு வந்து புஷ்பவனம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புஷ்பவனம் பகுதியில் பதுங்கியிருந்த சக்திவேலை கைது செய்தனர்.பின்னர் அவரை வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்