எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு பேட்டி

எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2022-09-05 12:16 GMT

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அ.தி.மு.க.வில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர்.

எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கொறடா கொடுத்த மனு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்