ஏரல் தாமிரபரணி ஆற்றில்விநாயகர் சிலைகள் கரைப்பு

ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

Update: 2023-09-19 18:45 GMT

ஏரல்:

இந்து முன்னணி சார்பில் ஏரல் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏரல், உமரிக்காடு, அகரம், பண்டாரவிளை, பண்னைவிலை புதூர், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், கொத்தலரி விலை உள்ளிட்ட ஊர்களில் 11 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏரல் பஸ் நிலையத்திலிருந்து பஜார் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏரல் தாமிரபரணி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பிரபாகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட இந்த அன்னையர் முன்னணி மகேஸ்வரி, ஏரல் நகர தலைவர் சிவராமன், நகர பொது செயலாளர் ஆத்திபழம், ஒன்றிய செயலாளர் பெரியசாமி நிர்வாகிகள் இசக்கி, மாரிமுத்து, பா.ஜ.க. ஒன்றிய தலைவர் ராஜகோபால் மற்றும் பொறுப்பாளர்கள் முத்துமாலை, வெங்கடேஷ் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்