ஆண்டிப்பட்டியில்சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மது மற்றும் போதைப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி, ஆண்டிப்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-17 18:45 GMT

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மது மற்றும் போதைப் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி, ஆண்டிப்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தனிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சமுதாயம் மற்றும் குடும்பங்களை சீரழிக்கும் மது மற்றும் போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்