தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு, தன்னிச்சை அமைப்பான அமலாக்கத்துறையின் மூலம் விசாரணை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விசாரிப்பதை கண்டித்தும், விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.