தாளவாடியில் அதிக ஒலி எழுப்பிய 20 பஸ்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

தாளவாடியில் அதிக ஒலி எழுப்பிய 20 பஸ்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-09-22 00:10 GMT

தாளவாடி,

தாளவாடி மலைப்பகுதியில் வாகனங்களில் அதிக ஒலிகள் எழுப்பப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி.கண்ணன் தாளவாடி பகுதியில் உள்ள சாம்ராஜ்நகர் செல்லும் சாலை, கும்டாபுரம் செல்லும் சாலை, ஓசூர் செல்லும் சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து 20 பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்து, ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்