தாளவாடி மலைப்பகுதியில் பஸ் படிக்கட்டில் நின்று பயணிக்கும் மாணவர்கள்

தாளவாடி மலைப்பகுதியில் பஸ் படிக்கட்டில் நின்றுக்கொண்டே மாணவர்கள் பயணித்தாா்கள்.

Update: 2023-09-22 00:07 GMT

தாளவாடி

தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தாளவாடி, சூசைபுரம் மல்லங்குழி, பனக்கள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளிக்கூடம் சென்று வர இவர்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. அதேபோல் நேற்று மாலை தாளவாடியில் இருந்து சூசைபுரம் வழியாக பனக்கள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவ-மாணவிகள் பஸ்சுக்குள் போதுமான இடம் இல்லாத காரணத்தால் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் நின்ற படி பயணம் செய்தனர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறும்போது, 'காலை மற்றும் மாலையில் பள்ளிக்கூட நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே எங்கள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்