தாளவாடி பகுதியில்பலத்த மழை; வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது

தாளவாடி பகுதியில் பலத்த மழையால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2023-10-15 01:31 GMT

தாளவாடி

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளான சூசையபுரம், பையனாபுரம், சிமிட்டஹள்ளி, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பையனாபுரம் கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை தூறியது.

Tags:    

மேலும் செய்திகள்