தாளவாடி பகுதியில் கடும் பனிமூட்டம்
தாளவாடி பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது.;
தாளவாடி
தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதேபோல் காலை 9 மணி வரை கடும் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், பனக்கள்ளி மற்றும் திம்பம் மலைப்பாதையில் நேற்று கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக ஊர்ந்து சென்றன. இதன்காரணமாக விவசாய பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.