மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகபல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சி.ஐ.டி.யூ., இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சி.ஐ.டி.யூ., இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.