கடையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-17 18:45 GMT

கடையம்:

கடையம் பஸ்நிலையம் அருகே உள்ள சின்ன தேர்த்திடலில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் கடையத்தில் நின்று செல்வது போல பாலக்காட்டில் இருந்து நெல்லைக்கு வரும் ெரயில் அதிகாலை நேரத்திலும் கடையத்தில் நின்று செல்ல வேண்டும். தற்போது புதிதாக தொங்கப்பட்டுள்ள சென்னை தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயில் கீழ கடையம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இ்ந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடையம் யூனியன் கவுன்சிலர் மாரி குமார் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரெயில் பயணிகள் சங்க செயலாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்