ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம்

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

தட்டார்மடம்:

ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை ஓட்டி அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஊராட்சி தலைவர் பெரியசாமிஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர். இதில் உதவி வேளான்மை அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், சொட்டுநீர் பாசன அலுவலர் அபிஷே் ஆகியோர் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி விளக்கி பேசினர். மேலும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, பெல்சி, சிகரம் அறககட்டளை இயக்குனர் முருகன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் பவூல் சூசை மனுவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்