ஸ்ரீவைகுண்டத்தில் ஆடுகளை திருட முயன்ற வாலிபர் கைது

ஸ்ரீவைகுண்டத்தில் ஆடுகளை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-18 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆடுகளை திருட முயற்சி

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் தங்கப்பாண்டி (வயது 27). இவருக்கு சொந்தமான ஆடுகள் கடந்த 15-ந்தேதி அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தன. அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த முருகேசன் மகன் அருண்குமார் (27) என்பவர் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மோட்டார் சைக்கிளுடன் சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அருண் குமார் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டுவழக்கும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும், ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 12 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்