ஸ்ரீவைகுண்டத்தில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா
ஸ்ரீவைகுண்டத்தில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
ஸ்ரீவைகுண்டம்:
முன்னாள் பிரதம மந்திரி இந்திராகாந்தியின் 105-வது பிறந்தநாள் விழா ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு வட்டாரத் தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். நகர தலைவர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.