தென்திருப்பேரையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம்
தென்திருப்பேரையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சி பற்றி எடுத்துரைத்தார். முகாமில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் திராவிட இயக்க வரலாறு பற்றி தமிழன் பிரசன்னாவும், மாநில சுயாட்சி என்ற தலைப்பில் கோபி லெனினும் கட்சி தொண்டர்களிடையே கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்தனர். முகாமில், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.