சிவகிரியில் விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி

சிவகிரியில் விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-10-28 21:52 GMT

சிவகிரியில் விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

விதைச்சான்று

சிவகிரியில் ஈரோடு துல்லிய பண்ணை விதை உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வளாகத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி, வேளாண்மை, உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

நோய் -பூச்சு தாக்குதல்

பயிற்சியின்போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள் நோய் மற்றும் பூச்சு தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். மேலும் தொழில்நுட்ப விதைச்சான்று அலுவலர் கணேசமூர்த்தி விதைப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல் குறித்து பயிற்சி அளித்தார்.

இதில் ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி மற்றும் விதைப்பண்ணை சாகுபடியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கொடுமுடி அட்மா திட்ட வட்டார மேலாளர் கிருத்திகா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்