சீர்காழியில், கொத்தனார் மர்மசாவு
சீர்காழியில், கொத்தனார் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து;
சீர்காழி:
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சீர்காழி மேல வீதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் முருகன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி சாந்தி(44) சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.