பட்டுக்கூடு அங்காடிகளில் ஆன்லைன் ஏல முறையை அமல்படுத்த வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்

பட்டுக்கூடு அங்காடிகளில் ஆன்லைன் ஏல முறையை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-06-09 18:45 GMT

தேனி மாவட்ட விவசாயி சங்க நிர்வாகி மாயி தலைமையிலான விவசாயிகள் வீரபாண்டி அருகே உள்ள பட்டுக்கூடு அங்காடிக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்காடி தொழில்நுட்ப உதவியாளர் சுஜா ருக்மணி பாயிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், தேனி அங்காடியில் அனுபவவமிக்க அலுவலர்களை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அங்காடிகளில் விற்பனை செய்த பட்டுக்கூடுகளுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும், அனைத்து அங்காடிகளிலும் ஆன்லைன் ஏல முறையை அமல்படுத்த வேண்டும், அங்காடிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்பட 13 கோரிக்கைகளை கூறியிருந்தனர். இதையடுத்து மனுவை பெற்று கொண்ட அதிகாரி தங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்