சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-12-06 00:04 GMT

ஊஞ்சலூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஊஞ்சலூர் நாகேஸ்வரசாமி, கொளாநல்லி பாம்பலங்காரசாமி கோவில்களில் மூலவர்களுக்கும், நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதேபோல் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

இதேபோல் கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கோபி டவுன் மாதேசியப்பன் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.மாதேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்