வட்டார வள மைய அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி

அனக்காவூர் வட்டார வள மைய அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

Update: 2023-07-26 10:17 GMT

செய்யாறு

அனக்காவூர் வட்டார வள மைய அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

பயிற்சியினை அனக்காவூர் வட்டார கல்வி அலுவலர் எ.புவனேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சு.ராமமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வே.சல்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியில் பள்ளி மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் திறன்கள் மற்றும் கற்றல் இணை செயல்பாடுகள், பள்ளியின் மன்ற செயல்பாடுகள், மாணவர்களின் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் ஆசிரியர் கையாள வேண்டிய எளிமையான கற்பித்தல் உபகரணங்கள் குறித்து கருத்தாளர்கள் கண்ணகி, முருகதாஸ், இந்துமதி, அர்ச்சனா, சண்முகம் மற்றும் திரு.நாகராஜ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதனை செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் அ.நளினி ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கிடையே மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல் முறைகளை பற்றி எடுத்து கூறினார். அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர்கள் அற்பணிப்புடன் செயல்பட வேண்டும். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனில் நூறு சதவீதம் மேம்பாடு அடைய வேண்டும் என்றார். இப்பயிற்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்