சிப்காட் பகுதியில் மின்சாரம் தாக்கி கறிக்கடை ஊழியர் சாவு
சிப்காட் பகுதியில் மின்சாரம் தாக்கி கறிக்கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிப்காட்:
தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று, கடையில் பணியில் இருந்த போது, மின்விளக்கு சுவிட்சை ஆன் செய்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகிய பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.