சத்தி நகராட்சி பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
குடிநீர் வினியோகம்
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கோம்புப்பள்ளம் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பிரதானக் குழாய்கள் சரி செய்யும் பணி நடக்க உள்ளது. இதனால் திருவள்ளுவர் திடல் மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் கட்டபொம்மன் நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சத்தியமங்கலம்- 1 பகுதியில் குடிநீர் வினியோகம் நடைபெறாது.
இதனை நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலமாக வீதி வீதியாக அறிவித்துள்ளது.