சத்தியமங்கலத்தில் வேன் உரிமையாளர் தற்கொலை
சத்தியமங்கலத்தில் கடன் தொல்லையால் வேன் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கடன் தொல்லையால் வேன் உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.
மாத தவணைக்கு
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் வசித்து வந்தவர் சக்திவடிவேல் (வயது 40்). அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேைல பார்த்து வந்தார். இவருடைய மனைவி அகல்யா (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 4 மாதத்துக்கு முன்பு நிதி நிறுவனத்தில் மாத தவணைக்கு கடன் பெற்று சக்திவேல் ஒரு வேன் வாங்கினார்.
குடிப்பழக்கம்
சக்திவடிவேலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கிடைத்த வருமானத்தால் மாத தவணை கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டு வேலைக்கு சென்று வந்த அகல்யாவின் கூலியையும் வாங்கி அவர் செலவு செய்துள்ளார்.
இதன்காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு அடிக்கடி மனைவியிடம் நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அகிலா கவலை படாதீர்கள் கடனை கட்டிவிடலாம் என்று ஆறுதல் கூறி வந்துள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் அகல்யா வீட்டு வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டனர். மாலையில் அகல்யா வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு சக்திவடிவேல் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனே அகல்யா அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சக்திவடிவேலை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.