சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,032-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,032-க்கு ஏலம் போனது.

Update: 2023-04-13 22:20 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,032-க்கு ஏலம் போனது.

பூ மார்க்கெட்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர், கொத்தமங்கலம், புதுபீர்கடவு, பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 

மல்லிகைப்பூ கிலோ ரூ.1,032

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,032-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.725-க்கும், செண்டுமல்லி ரூ.39-க்கும், பட்டுப்பூ ரூ.110-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.735-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.54-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள்

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.297-ம், முல்லை ரூ.20-ம், காக்கடா ரூ.225-ம், பட்டுப்பூ ரூ.20-ம், கனகாம்பரம் ரூ.100-ம், செவ்வந்தி ரூ.40-ம் விலை உயர்ந்து ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க செயலாளர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'தமிழ் புத்தாண்டு நாளை (அதாவது இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வியாபாரிகளுக்கு பூக்கள் அதிக அளவில் தேவைப்பட்டதால், போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்து சென்றனர். இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,' என தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்