சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,397-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,397-க்கு ஏலம் போனது.

Update: 2022-12-08 21:44 GMT

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 397-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், காக்கடா ரூ.875-க்கும், செண்டுமல்லி ரூ.28-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.320-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.405-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.280-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.402-ம், காக்கடா ரூ.50-ம், பட்டுப்பூ ரூ.10-ம், சம்பங்கி ரூ.10-ம், அரளி ரூ.40-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.402 விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மல்லிகைப்பூ அதிக அளவில் பூக்கவில்லை. இதன்காரணமாக மல்லிகைப்பூக்கள் வரத்து மார்க்கெட்டுக்கு குறைந்துவிட்டது. அதே நேரத்தில் மல்லிகைப்பூவுக்கான தேவை அதிக அளவில் இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு மல்லிகை பூக்களை ஏலம் எடுத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்