சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் 3-வது நாளாக போராட்டம்
சாத்தான்குளத்தில் திங்கட்கிழமை வழக்கறிஞர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சங்க அலுவலகத்தை திறக்க கோரி வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நீதிமன்றம் முன்பு சங்கத் தலைவர் கல்யாண் குமார் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.