`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குருநாதபுரத்தில் புதிய மின்மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகம்

`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குருநாதபுரத்தில் புதிய மின்மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருநாதபுரத்தில் உள்ள மின்மாற்றி மூலம் மின்சாரம் பெற்று விவசாயிகள் தென்னை, வெற்றிலை, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள பழுதான மின்மாற்றியை மாற்றவில்லை எனக்கூறி விவசாய குடும்பத்தினர் பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாவட்ட இந்து அன்னையர் அணி அமைப்பாளர் கேசவன், பரமன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் இலங்காபதி ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார்கள். அப்போது 24 மணி நேரத்தில் புதிய மின்மாற்றிகள் மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுபற்றிய செய்தி நேற்று `தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், மின்சார வாரிய திருச்செந்தூர் உதவி பொறியாளர் முத்துராமலிங்கம,் உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து மற்றும் ஊழியர்கள் புதிய மின்மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கினர்.

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, எங்கள் போராட்ட செய்தி `தினத்தந்தி'யில் வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்து 24 மணி நேரத்தில் மின்மாற்றி அமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான `தினத்தந்தி'யை பாராட்டுகிறோம். என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்