புஞ்சைபுளியம்பட்டியில் லாரி மோதி 3 கார்கள்- ஆட்டோ சேதம்
புஞ்ைசபுளியம்பட்டியில் லாரி மோதியதில் 3 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம் அடைந்தது. மேலும் இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்ைசபுளியம்பட்டியில் லாரி மோதியதில் 3 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம் அடைந்தது. மேலும் இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி மோதியது
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி டானா புதூர் போலீஸ் சோதனை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவையில் இருந்து பவானிசாகர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. புஞ்சைபுளியம்பட்டி சோதனை சாவடி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்புறத்தில் மோதியது. மேலும் எதிரே வந்த 2 கார்கள் மற்றும் பயணிகள் ஆட்டோ மீதும் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் ஆட்டோ கவிழ்ந்ததுடன், 3 கார்களும் சேதம் அடைந்தது.
13 பேர் காயம்
இந்த விபத்தில் லாரியின் முன்னாள் சென்ற காரில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற கோவை பாரதி நகரை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 46), அவருடைய மனைவி சத்தியபாமா (40), மகள் பிரியதர்ஷினி (23) பக்கத்து வீட்டுக்காரரான டிரைவர் பத்மநாபன் (27), அவருடைய மனைவி சவுந்தரியா (25) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் லாரியின் எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து கோைவ நோக்கி 2 கார்களில் வந்த வெங்கடேசன் (44), கிருத்திகா (19), ஜோதிகா (17) கண்ணம்மாள் (64), சத்தியமங்கலத்தை சேர்ந்த அனிதா (36), கனிஷ் சபரீஷ் (11) காஜா செரிப் (37), ஆட்டோவை ஓட்டி வந்த நொச்சிகுட்டையை சேர்ந்த டிரைவர் முருகசாமி (45) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர்.
ேபாக்குவரத்து பாதிப்பு
காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சத்தியமங்கலம் மற்றும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மீட்பு வாகன உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான கார்கள் மற்றும் ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், 'லாரியின் பிரேக் பிடிக்காததால் விபத்து நடைபெற்று உள்ளது,' தெரியவந்து உள்ளது. விபத்துக்கு காரணமான லாரியின் டிரைவரான தேனி மாவட்டம் முசிறியை சேர்ந்த அசோக்குமார் (33) மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தின் போது ராஜா என்பவரின் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.