புஞ்சைபுளியம்பட்டியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் கடத்தலா?; போலீசார் விசாரணை

புஞ்சைபுளியம்பட்டியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் கடத்தப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-19 00:22 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் கடத்தப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் புரோக்கர்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராப்பாடி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 53). ரியல் எஸ்டேட் புரோக்கர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.

கடந்த 14-ந் தேதி தனது மனைவி ராஜேஸ்வரியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி காரில் பாபு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பாபு வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களிலும் பாபுவை ராஜேஸ்வரி தேடிப்பார்த்தார். ஆனால் அவரால் பாபுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடத்தலா?

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த செல்லப்பம்பாளையம் அருகே உள்ள பகுதிக்கு காரில் வந்த 4 பேர், அங்கிருந்த பாபுவை அவர்களுடைய காரில் ஏற்றியதுடன், பாபுவின் காரையும் எடுத்துக்கொண்டு சென்றதாக ராஜேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

உடனே அவர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்கேனும் சென்றாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.    

Tags:    

மேலும் செய்திகள்