புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.
கால்நடை சந்தை
புஞ்சைபுளியம்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.
20 எருமைகள், 150 கலப்பின மாடுகள், 60 கன்றுகள், 100 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். எருமை ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், கருப்பு-வெள்ளை மாடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி பசுமாடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரையும் விற்றது.
ரூ.1 கோடிக்கு விற்பனை
சிந்து மாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையும், நாட்டு மாடு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும் விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் விற்றது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், செம்மறி ஆடு ரூ.6 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
மாடுகள் ரூ.80 லட்சத்துக்கும், ஆடுகள் ரூ.20 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.