பெருந்துறையில் வங்கி பெண் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை

பெருந்துறையில் வங்கி பெண் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-09-18 21:51 GMT

பெருந்துறை

பெருந்துறையில் வங்கி பெண் மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

துணை மேலாளர்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.

இதற்காக பெருந்துறை சென்னிமலை ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு துணையாக தந்தை ராமு உடனிருந்து வந்து உள்ளார்.

உள்பக்கமாக...

கடந்த 14-ந் தேதி சொந்த வேலையாக வெளியூருக்கு ராமு சென்றுவிட்டார். மீண்டும் அவர் பெருந்துறையில் உள்ள வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனர். அப்போது படுக்கையில் சிவரஞ்சனி பிணமாக கிடந்ததை கண்டனர்.

சாவு

இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'விஷம் குடித்து சிவரஞ்சனி தற்கொலை செய்து கொண்டது,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவரஞ்சனியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவரஞ்சனி தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்