பெரியதாழையில் கொரோனா தடுப்பூசி முகாம்
பெரியதாழையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 14-வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையொட்டி சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை சிறுமலர் உயர்நிலைப்பள்ளியில் படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ அலுவலர்கள் ரேவந்த், ஜோஸ்டீனா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை நடத்தி தடுப்பூசி செலுத்தினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மேரி திலகவதி செய்திருந்தார்.