பெரியதாழையில் ரூ.30 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார
பெரியதாழையில் ரூ.30 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா வரவேற்றார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார்.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷகுமார், சாத்தான்குளம் யூனியன்குழு தலைவர் ஜெயபதி, பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் உதவிகலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, யூனியன் ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், இளங்கோ, மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி உள்ளிட்ட பலர் கலந்து