பெரியகுளத்தில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை:சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்

பெரியகுளத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-15 18:45 GMT

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் வினோத் (வயது 26). இவர், தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வினோத்தின் தாயார் தனலட்சுமி பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்