பெரியகுளத்தில்விழிப்புணர்வு ஊர்வலம்

பெரியகுளம் கோர்ட்டில் சமரச மையத்தின் சார்பில், பொதுமக்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-17 18:45 GMT

பெரியகுளம் கோர்ட்டில் சமரச மையத்தின் சார்பில், பொதுமக்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி கணேசன் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். கோர்ட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வரை சென்றது. ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் மாஜிஸ்திரேட்டு சர்மிளா, பெரியகுளம் வக்கீல் சங்க தலைவர் அம்பாசங்கர், செயலாளர் ராமசுப்பரமணியன், சமரச மைய தொடர்பாளர்களான மூத்த வக்கீல்கள் ஞான குருசாமி, குணசேகரன், சிவசுப்பிரமணியன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் பாலமுருகன் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்