பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது

பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசாா் கைது செய்தனர்.;

Update: 2023-07-10 18:45 GMT

பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பேங்க் காலனி பகுதி நுழைவு வாயிலில் அனுமதியின்றி எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடி கம்பம் வைத்ததாக கூறப்படுகிறது. அந்த கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர். இதனால் அக்கட்சியினர் போலீசாரை கண்டித்தும், மீண்டும் அதே இடத்தில் கட்சி கொடி கம்பத்தை ஊன்ற வேண்டும் என்று வலியுறுத்தியும், பெரியகுளத்தில் திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட அந்த கட்சியை சேர்ந்த முபாரக் (வயது 66), உமர் பாருக் (31), முகமது உமர் (37), கனவா பீர் உள்பட 20 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்