பண்ருட்டியில் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 7 ஆட்டோக்கள் பறிமுதல் போலீசார் நடவடிக்கை
பண்ருட்டியில் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 7 ஆட்டோக்களை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி நகரத்தில் உரிய ஆவணமின்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் பரந்தாமன், பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று பண்ருட்டி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எவ்வித ஆவணமும் இன்றி 7 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 7 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆட்டோவின் முன் பகுதியில் பயணிகளை உட்கார வைத்து ஓட்டக்கூடாது, சீருடை அணிய வேண்டும், அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினா்