பண்ருட்டியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது

பண்ருட்டியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-02-22 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு ரோடு அருகில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 10 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் எய்தனூரை சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் விக்னேஷ்வரன்(வயது 28), நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கத்தை சேர்ந்த கென்னடி மகன் சந்துரு(23), புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தொியவந்தது. இதையடுத்து விக்னேஷ்வரன் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 10 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்