பந்தலூரில், பயணிகள் நிழற்குடையில் தெருநாய்கள் தொல்லை

பந்தலூரில், பயணிகள் நிழற்குடையில் தெருநாய்கள் தொல்லை உள்ளது.;

Update: 2023-08-10 18:45 GMT

பந்தலூர்: பந்தலூர் பஜார் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இதற்கிடையே நெல்லியாளம் வணிக வளாக கட்டிடம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடைக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து பஸ்களில் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பயணிகள் நிழற்குடையில் தெருநாய்கள் படுத்து கிடக்கின்றன. சில நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை தெருநாய்கள் துரத்துவதால் அவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதேபோல் அப்பகுதி தெருக்களிலும் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளிடம் தெரு நாய்கள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்