ஒரே நாளில்பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 14 திருமணங்கள்
ஒரே நாளில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 14 திருமணங்கள் நடந்தன.;
பவானி
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். குறிப்பாக நேற்று முன்தினம் வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால் கோவிலில் 7 திருமணங்கள் நடைபெற்றன. அதுமட்டுமின்றி 8 திருமண மண்டபங்களிலும் திருமணம் நடந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 திருமணங்கள் நடைபெற்றன. அதுமட்டுமின்றி பவானி கூடுதுறையில் 10-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. வருகிற 1-ந் தேதி சங்கமேஸ்வரர் கோவிலில் 21 திருமணங்கள் நடத்த முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.