நொச்சிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம்
நொச்சிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.;
கயத்தாறு:
திருமலாபுரம் பஞ்சாயத்து நொச்சிகுளம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கயத்தாறு கால்நடை உதவி இயக்குனர் விஜயாஸ்ரீ தலைமை தாங்கினார். இந்த முகாமில் கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோ மற்றும் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் 250 மாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் சினை ஊசி போட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், 400 வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி, 12 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குனர் விஜயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பசுங்கன்றுகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.