நெய்வேலியில் மேற்பார்வையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகைகள் திருட்டு

நெய்வேலியில் மேற்பார்வையாளர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகைகள் திருடியது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா்.

Update: 2022-09-24 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலி டவுன்ஷிப் 28-வது வட்டம என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கராசு மகன் ஆனந்தராஜ்(வயது 34). இவர் என்.எல்.சி. 2-ம் சுரங்கத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 8½ பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்