நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில்34 வாக்குச்சாவடி மையத்தை மாற்ற நடவடிக்கை

நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சேதமடைந்த 34 வாக்குச்சாவடி மையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 19:25 GMT

ஆலோசனை கூட்டம்

கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் ஸ்ரீதரன், தேவநாதன், தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. பகுதி துணை செயலாளர் வக்கீல் பாபு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், தே.மு.தி.க. நகர செயலாளர் சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இடமாற்றம்

கூட்டத்தில் 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கூறுகையில், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 257 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் கூடுதலாக அரசடிக்குப்பம், டி.புதுப்பாளையத்தில் 2 வாக்குச்சாவடிகள் அமைப்பது, நெய்வேலியில் சேதமடைந்த 7 வாக்குச்சாவடி மைய கட்டிடங்களையும், பண்ருட்டியில் 3 வாக்குச்சாவடி மைய கட்டிடங்கள், குறிஞ்சிப்பாடியில் 16 வாக்குச்சாவடி மைய கட்டிடங்கள் என மொத்தம் 26 வாக்குச்சாவடி மையத்தை இடமாற்றம் செய்வது, இந்த 3 தொகுதிகளிலும் 8 வாக்குச்சாவடி மையங்களை வேறு பகுதிக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இது தவிர மேலும் வாக்குச்சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது குறித்து அரசியல் கட்சியினர் தங்கள் கருத்துகளை நேரில் சென்று பார்த்து கருத்து தெரிவிக்கவும் அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்