நெல்லையில் 1,852 பேர் தேர்வு எழுதினர்
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை நெல்லையில் 1,852 பேர் எழுதினர்.
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ஓவர்சீயர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகர் ஊரமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1,083 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது.
நெல்லையில் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர், ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 14 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தேர்வுக்கு மொத்தம் 3,974 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1,852 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வு பணியை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி அதிகாரிகள் கண்காணித்தனர்.