நாசரேத்தில்வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
நாசரேத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.
நாசரேத்:
நாசரேத் நகர வியாபாரிகள் சங்க 47-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. தலைவர் எட்வர்ட் கண்ணப்பா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஞானையா வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் அசுபதி சந்திரன் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் ஜெயக்குமார் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். சிறப்பு விருந்தினராக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். கூட்டத்தில் நாசரேத்தை தனி தாலுகாவாக ஆக்கவேண்டும், மூடி கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும், பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடியே கிடக்கும் திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வந்த இடத்தில் அரசு வேறு ஒரு தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க இணைச் செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.