நாசரேத்தில் மனநல பாதுகாப்பு இல்ல விழா
நாசரேத்தில் மனநல பாதுகாப்பு இல்ல விழா நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத் நல்ல சமாரியன் மனநல பாதுகாப்பு இல்லத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. மூக்குப்பீறி அரசு மருத்துவமணை மருத்துவ அலுவலர் டாக்டர். கபிலன் தலைமை தாங்கி பேசினார். நாசரேத் லூக்கா மருத்துவமனை நிர்வாக அலுவலர் டி. ஜே. எஸ். ரத்தினகுமார், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி, துணைத்தலைவர் அருண் சாமுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இடையே விளையாட்டுப ்போட்டி நடைபெற்றது. மேலும் குறு நாடகம், பாட்டுப் போட்டியும் நடத்தப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற அரசு மருந்தாளுநர் ஆண்ட்ரூஸ், முன்னாள் தலைமை ஆசிரியர் ஞானசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.