நம்பியூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நம்பியூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-07-25 21:53 GMT

நம்பியூர்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டித்து நம்பியூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க நம்பியூர் வட்ட கிளை தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் கருப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி பேசினார்.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர் அருள், தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்க உறுப்பினர் ரகு உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்